×

ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை

சேலம், மே 1: சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பாக்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பாக்கு மரத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பாக்கு கொட்டைகளை விவசாயிகள் சேலம் பால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அதன்படி, நேற்று ஏராமான விவசாயிகள் பாக்குகொட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்தாண்டு போதுமான மழை இல்லாததன் காரணமாக நடப்பாண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கிருந்து மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

The post ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Salem ,Athur ,Dhamambatti ,Kengavalli ,Karumanturai ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...